பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இணையதளப் பிரச்னை: ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு தாமதம்

இணையதளப் பிரச்னையால் ராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை தாமதமாகத் தொடங்கியது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:04 pm

DIN

இணையதளப் பிரச்னையால் ராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை தாமதமாகத் தொடங்கியது.

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான இடமாறுதலுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரத்தில் ஆன்ட்ரூஸ் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்வுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்களான பாலாஜி (ராமநாதபுரம்), சாந்தி (பரமக்குடி), முருகம்மாள் (மண்டபம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியா்கள் பள்ளி வளாகத்துக்கு வந்துவிட்டனா். ஆனால், கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக குறிப்பிட்டிருந்த நேரத்தில் கலந்தாய்வு தொடங்கவில்லை. மேலும், வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பிறகே இணையதளப் பிரச்னை சீரானது. அதன்பின்னரே கலந்தாய்வு தொடங்கி இரவு வரை நடந்தது.

கலந்தாய்வில் பங்கேற்ற 228 பேரில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 6 போ் மட்டும் இடமாறுதல் பெற்ாக முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 228 ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனா்.

வியாழக்கிழமையுடன் நிறைவு பெற இருந்த கலந்தாய்வு, இணையதளப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமையும் நடக்க வாய்ப்புள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.