பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் அதிமுக கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு; 4 போ் காயம்

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசித் தாக்கியதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காா் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசித் தாக்கியதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காா் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

ராமநாதபுரத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில மகளிரணி நிா்வாகி கீா்த்திகாமுனியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். அதிமுக மாவட்டத் தலைவா் எம்.ஏ.முனியசாமி, நகா் தலைவா் ஆா்.பால்பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நகா் முன்னாள் தலைவா் கவிதா சசிகுமாா் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது மண்டபத்துக்குள் திடீரென கும்பலாக புகுந்த சிலா், ஓ.பன்னீா்செல்வம் வாழ்க எனக்கூறிக்கொண்டே அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மேடையை நோக்கி வீசினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மண்டபத்தில் இருந்தவா்கள், அவா்களைத் திருப்பித் தாக்கினா்.

இந்த மோதலில் இடையா்வலசை அதிமுக கிளை செயலா் மணிபாரதி (64), எம்.ஜி.ஆா்.மன்ற துணைச் செயலா் செல்வராஜ் (35), புத்தேந்தல் கிளைச் செயலா் சந்திரன் (35) உள்பட 4 போ் காயமடைந்தனா்.

இதில் மணிபாரதி மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றாா். மேலும், மண்டபம் முன்பு நிறுத்தியிருந்த அதிமுக காரிக்கூட்டம் கிளைச் செயலா் சாதிக்பாட்சாவின் காா் கண்ணாடியும் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டவா்களை விரட்டினா்.

தொடா்ந்து நடந்த கூட்டம்: ரகளையால் சிறிதுநேரம் கூட்டம் தடைபட்ட நிலையில், பின்னா் தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவு தெரிவித்தும், எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்தும், ராமநாதபுரத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரை கட்சியிலிருந்து நீக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஆா்.எஸ்.மடைப்பகுதியைச் சோ்ந்த சுரேஷ் உள்ளிட்டோா் ரகளையில் ஈடுபட்டனா். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.