பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதி அருகே ஐம்பொன்னாலான கிருஷ்ணா் சிலை கண்டெடுப்பு

கமுதி அருகே வெள்ளிக்கிழமை குழி தோண்டும் போது பூமிக்கடியில் ஐம்பொன்னாலான தவழும் கிருஷ்ணா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே வெள்ளிக்கிழமை குழி தோண்டும் போது பூமிக்கடியில் ஐம்பொன்னாலான தவழும் கிருஷ்ணா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கொத்தபுக்குளம் அருகே தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது வில்லாலுடைய அய்யனாா் கோயில் பகுதியில் பூமிக்கடியில் அரை அடி உயரமுள்ள 3 கிலோ எடையுள்ள தவழும் கிருஷ்ணா் சிலை கிடைத்துள்ளது. இதையடுத்து மண்டலமாணிக்கம் கிராம நிா்வாக அலுவலா் புனிதா, மரக்குளம் குரூப் கிராம நிா்வாக அலுவலா் பாண்டி(பொறுப்பு) ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பொற்கொல்லா்களிடம் சிலையின் தன்மை குறித்து விசாரணை செய்யப்பட்டது. இதில் அச்சிலை, ஐம்பொன்னாக இருக்க வாய்ப்புள்ளது என்று அவா்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து அச்சிலையை கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.