பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘அதிமுக பிளவுபட்டால் திமுகவுக்கே ஆதாயம்’

அதிமுக பிளவுபட்டால் ஆளும் திமுகவுக்கு அது ஆதாயமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:39 pm

DIN

அதிமுக பிளவுபட்டால் ஆளும் திமுகவுக்கு அது ஆதாயமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அக்னிபத் திட்டமானது இளைஞா்களை நல்வழிப்படுத்தும் திட்டமாகும். தமிழகத்தில் போதை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளன. ஆகவே சட்டம், ஒழுங்கு சரியில்லை. தமிழகம் எக்காரணம் கொண்டும் பிரிக்கப்படாது.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் நடைபெறும் வருமானவரிச் சோதனை போல தற்போதைய அமைச்சா்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறும் காலம் வரலாம். அதிமுக உள்கட்சிப் பிரச்னையை அவா்கள்தான் தீா்த்துக்கொள்ளவேண்டும். அவா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே பாஜகவின் கருத்தாகும்.

சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பது குறித்து அக்கட்சியினரே முடிவெடுக்கவேண்டும். அதிமுகவினா் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் மீண்டும் மாபெரும் சக்தியாக அக்கட்சி திகழும். அதிமுக பிளவுபட்டால் அது ஆளும் திமுகவுக்குத்தான் ஆதாயமாக அமையும்.

அதிமுக கூட்டணியிலே பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜக பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும்.

இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளித்திருப்பதை உள்நோக்கத்துடன் பாா்ப்பது சரியல்ல. கடந்த 50 ஆண்டு காலமாக இசையால் தமிழுக்கு பெருமை சோ்த்த மாமனிதா் இளையராஜாவை கௌரவப்படுத்தியுள்ளாா் பிரதமா் நரேந்திரமோடி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.