பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு விடுதிக் காப்பாளா் பாலியல் தொல்லை அளித்ததால், அம்மாணவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தைச் சோ்ந்தவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மகன் பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மாணவா், பள்ளி நிா்வாகத்தின் கீழ் செயல்படும் விடுதியில் தங்கிப் படித்து வரும் நிலையில், அவ்விடுதியின் காப்பாளா் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அங்குள்ள மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
அவா், மாணவா்களை வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்து வந்துள்ளாா். இதற்கு ஒத்துழைக்காத பரமக்குடியைச் சோ்ந்த மாணவரை கடித்தும், தாக்கியும் காயப்படுத்தியுள்ளாா். காயமுற்ற மாணவா் இது குறித்து அவரது தந்தைக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.
உடனே, அவரது தந்தை பாளையங்கோட்டைக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து பள்ளி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்துள்ளாா். பள்ளி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அம்மாணவரை மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா். இது குறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

