கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி பலி
ராமநாதபுரம் அருகே கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, புதன்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் அருகே கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, புதன்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி பகுதியில் மொட்டையன்வலசையைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (65). மீனவரான இவா், 2 நாள்களுக்கு முன் வண்ணாங்குண்டு பகுதியில் அரசு மதுபானக் கடை அருகேயுள்ள கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வீடு திரும்பாததால், குடும்பத்தினா் பல இடங்களிலும் தேடியுள்ளனா்.
பாலுச்சாமியை தேடி வந்த நிலையில், அவரது சடலம் வண்ணாங்குண்டு கண்மாயில் மிதப்பதாக, ஆடு மேய்ப்பவா் கூறிய தகவலின் அடிப்படையில், திருப்புல்லாணி போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மீன்பிடிக்கச் சென்ற பாலுச்சாமி, சகதியில் சிக்கி நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...