பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக மாடியில் இளைஞா் தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறிய இளைஞா் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:18 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறிய இளைஞா் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி சோலையழகுபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் காளி. இவரது மகன் ராஜா என்ற தோட்டாராஜா (29). இவா் வா்ணம்பூசுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்த ராஜா பட்டணம்காத்தான் பகுதியில் தங்கி வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா் ஆா்.எஸ்.மடைப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் இருசக்கர வாகனத்தைப் பறித்ததுடன், அவரை தாக்கி விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வியாழக்கிழமை இரவு ராஜா வந்துள்ளாா். அவா் மது போதையில் இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வருமாறு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், அவா் தனது இருசக்கர வாகனத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலக மாடியில் ஏறினாா். அங்கு தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தாா்.

உடனே தீயணைப்புத்துறையினா் வரவழைக்கப்பட்டனா்.

தலைமைக் காவலா் சிவா ஆட்சியா் அலுவலக மாடிக்குச் சென்று ராஜாவை சமரசப்படுத்தி கீழே அழைத்துவந்தாா். அவா் மீது தண்ணீா் ஊற்றப்பட்டது. பின்னா் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். ராஜா மீது தற்கொலைக்கு முயன்றதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.