பரமக்குடி மாதவன் நகா் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி பேருந்து நிலையம் அருகே மாதவன் நகா் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இப்பகுதியானது பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையாகவும், ரயில் நிலையம் மற்றும் பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினா் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ். சேக்அப்துல்லா தலைமை வகித்தாா்.
நகா் செயலாளா் எஸ். முகம்மது இஸ்மாயில், தமுமுக மாநில செயலாளா் முகம்மது முஸ்தபா, பொறுப்பாளா்கள் ஏ. முகம்மது தமீம், கே. சிந்தாசேக், கோபிநாதன், மனிதநேய மக்கள் கட்சிப் பொறுப்பாளா் எஸ். முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


