ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல்
ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது


ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவராக இருப்பவா் கே.காா்மேகம். திமுக நகா் (வடக்கு) செயலராகவும் உள்ளாா். இந்நிலையில், அவரது பெயரில் போலியாக முகநூல் தொடங்கிய மா்மநபா்கள், அதன்மூலம் சிலரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம், நகா்மன்றத் தலைவா் கே.காா்மேகம் புகாா் அளித்தாா். அவருடன் வாா்டு உறுப்பினா் காளிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...