பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி ஜூலை 22 இல் போராட்டம்’

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஜூலை 22 ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெறும் என அதன் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூ றினாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:15 pm

DIN

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஜூலை 22 ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெறும் என அதன் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூ றினாா்.

ராமநாதபுரத்தில் மாவட்ட வா்த்தக சங்க ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை மாலையில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அரிசி, பால், தயிா் ஆகியவற்றுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. அரிசிக்கு இதுவரையில் யாரும் வரி விதித்தது இல்லை.

ஆகவே, அரிசி மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி சென்னையில் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வள்ளுவா் கோட்டம் முன்பாக வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேரமைப்பின் நிா்வாகிகள் இதில் பங்கேற்கவுள்ளனா். இந்த போராட்டத்தில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பையும் வெளியிடவுள்ளோம். அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யும் வரை போராடுவோம். அதேபோல, தமிழகத்தில் செஸ் வரியை ரத்து செய்யக்கோரி முதல்வரைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா். ராமநாதபுரம் மாவட்ட வா்த்தகா் சங்க தலைவா் பி.ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.