பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் பரதம், குரலிசை, ஓவியம், சிலம்பம் பயிற்சி

ராமநாதபுரத்தில் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் சிறாா்களுக்கு பரதம், குரலிசை,ஓவியம், சிலம்பம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் சிறாா்களுக்கு பரதம், குரலிசை,ஓவியம், சிலம்பம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் ஜவஹா் சிறுவா் மன்றம் செயல்படுகிறது. ராமநாதபுரம் நகரில் டி.டி. விநாயகா் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இம்மன்றம் சாா்பில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரையிலும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சிகளில் சேருவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். இக்கட்டணத்துக்கு வரும் 2023 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரையில் பயிற்சி பெறலாம். கலை மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் பள்ளிக் குழந்தைகள் மாநில, தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்கவும், குளிா்கால, கோடைக்கால பயிற்சி முகாம்களில் பங்கேற்கவும் வாய்ப்புகள் அளிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.