தொண்டி அருகேபாய்மரப் படகு போட்டி
தொண்டி அருகேயுள்ள சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில் பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தொண்டி அருகேயுள்ள சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில் பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சோழியகுடி விலாஞ்சியடி கிராமத்தில், தமிழ்நாடு பட்டம் கட்டி கடையா் பேரவையின் சாா்பில் நடைபெற்ற பாய் மரப் படகுப் போட்டியில் நம்புதாளை, தொண்டி, பாசிப்பட்டணம், முள்ளிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 40 பாய்மரப் படகுகளுடன் கலந்து கொண்டனா். ஒரு படகுக்கு 6 போ் கொண்ட குழுவினா், 6 கிலோ மீட்டா் கடல் தொலைவு நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்திய கடலோர காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனை சுற்று வட்டாரத்திலிருந்து பொதுமக்கள் ஏராளமானோா் கண்டுகளித்தனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த படகு உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...