சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பள்ளி அலுவலக ஊழியா் கைது

தொண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக ஊழியரை வெள்ளிக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:59 pm

DIN

தொண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக ஊழியரை வெள்ளிக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி, இப்பள்ளியில் எழுத்தராக பணிபுரியும் சுகவனம் (37) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு (சைல்டு லைன்) அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் , தொண்டி காவல் ஆய்வாளா் முருகேசன், திருவாடானை மகளிா் காவல் துறை ஆய்வாளா் வனிதா ஆகியோா் மாணவியிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து சுகவனத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.