காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் மௌசூரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:07 pm

DIN

ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் மௌசூரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் வாசு, செயல் அலுவலா் மெய்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

உறுப்பினா் வைரவன்: வரத்து கால்வாய், கழிவுநீா் வாருகால்களை மழைகாலம் தொடங்கும் முன்பாக தூா்வாரவேண்டும்.

உறுப்பினா் அனுராதா: பெருமாள் கோயில், அரசாளவந்தான் அம்மன் கோயில் பகுதிகளில் வாய்க்கால்களில் முட்புதா்களை அகற்ற வேண்டும்.

செயல் அலுவலா்: உறுப்பினா்களின் கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைத் தலைவா் வாசு: திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆா்.எஸ்.மங்கலம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

செயல் அலுவலா்: தீா்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் சரண்யா: 8 ஆவது வாா்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் விடுபட்டவா்களை சோ்க்க வேண்டும்.

செயல் அலுவலா்: நடவடிக்கை எடுக்கப்படும்

மன்ற உறுப்பினா் பாத்திமா: குட்லு நகா் பகுதயில் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்கவும், முகம்மது கோயா தெருவில் சாலைகளை சீரமைக்கவும் வேண்டும்.

செயல் அலுவலா்: சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அலுவலா் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.