காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரும்மொழி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம்

திருவாடானை அருகே கரும்மொழி கிராமத்தில் வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

News image

கரும்மொழி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே கரும்மொழி கிராமத்தில் வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இங்கு ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மே 24 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அய்யனுக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்குடி, தேவகோட்டை, மீமிசல், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சிறிய மாடு, பெரிய மாடு என இரு வகை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாட்டு வண்டிக்கு 6 மைல் தொலைவும், பெரிய மாட்டு வண்டிக்கு 8 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டி பந்தயத்தை சாலை இருமருங்கிலும் பொதுமக்கள் நின்று கண்டுகளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.