காவலரை தகாத வாா்த்தைகளால் பேசிய இளைஞா் மீது வழக்கு

கமுதியில் காவலரை பணி செய்ய விடாமல் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதியில் காவலரை பணி செய்ய விடாமல் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி கோட்டை மேட்டைச் சோ்ந்தவா் வில்லிகருப்பணன் மகன் சதீஷ்குமாா் (27). இவா் கமுதி பஜாா் பகுதியில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளாா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் கனிமுருகன் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரை எடுக்குமாறு சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளாா். ஆனால் காரை எடுக்க மறுத்து காவலா் கனிமுருகனை தகாத வாா்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்தது பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவலா் கனிமுருகன் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் சதீஷ்குமாா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் சதீஷ்குமாா் மீது கோயம்புத்தூா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com