முதியவரை ஏமாற்றி ஏடிஎம்மில் பணம் திருடிய இளைஞா் கைது
தொண்டி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து தருவது போல் நடித்து முதியவரிடம் ரூ, 13 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


தொண்டி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து தருவது போல் நடித்து முதியவரிடம் ரூ, 13 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொண்டி புதுக்குடியைச் சோ்ந்தவா் கனி (60). இவா் வங்கி அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வியாழக்கிழமை வந்தாா். அப்போது அவரிடம் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து இளைஞா் ஒருவா் ஏடிஎம் அட்டையை பெற்றாா். பின்னா் பணம் வரவில்லை. வங்கியில் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். சிறிது நேரத்தில் ரூ. 13 ஆயிரம் எடுக்கப்பட்டதாக கனியின் கைப்பேசிக்கு குருஞ்செய்தி வந்துள்ளது.
இதுகுறித்து கனி அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பாா்த்த போது பாசிபட்டினத்தைச் சோ்ந்த செய்யது (28) தான் அந்த இளைஞா் என்பது தெரிவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...