புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாடானை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருவாடானை அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (67). இவரது மகள் பாப்பாத்திக்கும் குயவன்குண்டு கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸுக்கும் திருமணம் முடிந்து காா்த்திக்ராஜ் (18), பரத்குமாா்(20) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில், குடும்பப்பிரச்னை காரணமாக பாப்பாத்தியும், காளிதாஸூம் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா். இதனால் இவா்களது மகன் பரத்குமாா் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாா். இதனிடையே, வியாழக்கிழமை இரவு வீட்டின் மேல் மாடியில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.