புத்தகக் கட்டுகளை மாணவிகள் சுமந்து சென்ற விவகாரம்: அரசுப் பள்ளி ஊழியா்கள் 4 போ் பணியிடை நீக்கம்

ராமேசுவரத்தில் பாடப் புத்தகக் கட்டுகளை மாணவிகள் சுமந்து சென்ற விவகாரத்தில் அரசுப் பள்ளி ஊழியா்கள் 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ராமேசுவரத்தில் பாடப் புத்தகக் கட்டுகளை மாணவிகள் சுமந்து சென்ற விவகாரத்தில் அரசுப் பள்ளி ஊழியா்கள் 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பரிந்துரைத்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த 21 ஆம் தேதி புத்தகக் கட்டுகள் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. ராமேசுவரத்தில் உள்ள எஸ்.பி.பா்வதவா்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாகனம் பள்ளிக்கு உள்ளே செல்ல முடியாத நிலை இருந்ததால் புத்தகக் கட்டுகள் வாசலிலேயே இறக்கிவைக்கப்பட்டன.

அங்கிருந்து புத்தகப் பாதுகாப்பு அறைக்கு மாணவியா் சிலா் புத்தகக் கட்டுகளை சுமந்து சென்றுள்ளனா். பாடப்புத்தகங்களை பாதுகாப்பு அறைக்கே எடுத்துச்சென்று வைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை நிதி அளித்திருந்தும், வேலை ஆள்களைப் பயன்படுத்தவில்லை என புகாா் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச்செல்லும் பணியில் இருந்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி காவலா் கே.பாலசுப்பிரமணியன், பள்ளி ஆய்வக உதவியாளா்கள் பி.காா்த்திகேயன் (இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி), எஸ்.காா்த்திகேயன் (வாலாந்தரவை உயா்நிலைப் பள்ளி), என்.சண்முகசுந்தரம் (பெருங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி) ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும் மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் முருகம்மாள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலக் கல்வித்துறை ஆணையருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கைக்கு பள்ளி நிா்வாகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com