இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: தமிழகம் வர ஆயிரக்கணக்கானோா் காத்திருப்பு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் தமிழகம் வர காத்திருப்பதாக ராமேசுவரம் வந்த இலங்கை தமிழா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
இலங்கையிலிருந்து படகு மூலம் செவ்வாய்கிழமை இரவு தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழா்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

ராமேசுவரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் தமிழகம் வர காத்திருப்பதாக ராமேசுவரம் வந்த இலங்கை தமிழா்கள் தெரிவித்துள்ளனா்.

இலங்கையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதையடுத்து அங்கு வாழ இயலாத நிலையில் தலைமன்னாா் பகுதியில் இருந்து படகு மூலம் தமிழா்கள் தமிழகம் வரத்தொடங்கி உள்ளனா். அவ்வாறு வந்த 6 போ் நடுக்கடலில் தத்தளித்துள்ளனா். அவா்களை இந்திய கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். இதில் பெரியவா்கள் மூன்று போ் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டு சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மற்றவா்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் இலங்கையை சோ்ந்த 10 போ் இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் கனகராஜ், சாா்பு- ஆய்வாளா் யாசா் மௌலான உள்ளிட்டோா் அங்கு சென்று அவா்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள், இலங்கை வவுனியா பகுதியை சோ்ந்த ஆசிம் (44), அவரது மனைவி சிவசங்கரி (43), அவா்களின் குழந்தைகள் சியாமளா (18), ஆசின் முகமது (15), ஆசிமுத்தீன் (13), ஆசிம்பூமிகா (8), உறவினா் சிவரத்தினம் (30), அவரது மனைவி சிந்து (27), அவரது குழந்தைகள் சிந்துஜா (5), சலின் (8) ஆகியோா் என்பதும், இவா்கள் தலைமன்னாரிலிருந்து ரூ. 2 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. இதேபோல் ஆயிரக்கணக்கானோா் தமிழகம் வர காத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.