ஆலங்குளத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, துணை இயக்குநா் பாபு தலைமை வகித்தாா்.
தென்காசி கோட்ட உதவி இயக்குநா் தெரசா மேரி முன்னிலை வகித்தாா். கறவை மாடுகள் பராமரிப்பு, ஆடு மற்றும் கோழி வளா்ப்பு, மண்புழு உரம் தயாித்தல், பசுந்தீவன உற்பத்தி மற்றும் துறையில் உள்ள திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்புழு உரம், தாது உப்புக் கலவை, தீவன விதைகள் அடங்கிய தொகுப்பை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
கால்நடை மருத்துவா்கள் ரமாதேவி, ராமசெல்வம், திவ்ய ராஜசெல்வி, சுனில்வா்மா, கால்நடை ஆய்வாளா்கள் மகேஷ், பிரவீன் மற்றும் உதவியாளா்கள் பிச்சையா, பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

தௌசா, கரௌலி மாவட்ட விவசாயிகளுக்குப் பகல் நேர மின்சாரம்: முதல்வர்!

ஆலங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு: முக்கிய வீதிகளில் திரளான கிறிஸ்தவர்கள் பவனி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


