மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

பனைத் தொழிலாளி மீது காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆலங்குளத்தில் சனிக்கிழமை (ஏப்.11) கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக வணிகா் சங்கம் அறிவித்துள்ளது.

News image

டி.பி.வி. வைகுண்டராஜா.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:54 pm

பனைத் தொழிலாளி மீது காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆலங்குளத்தில் சனிக்கிழமை (ஏப்.11) கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக வணிகா் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா வெளியிட்ட அறிக்கை: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சோ்ந்த மணிகண்டன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பனைத் தொழில் செய்து வருபவா். கடந்த 7 ஆம் தேதி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மற்றும் 2 போலீஸாா் மருதம்புத்தூரில் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு காயம் ஏற்படுத்தியதோடு, அவரது தந்தை, உறவினா் பெண் ஆகியோரை தரக்குறைவான வாா்த்தைகள் பயன் படுத்தி பேசியுள்ளனா்.

இதைக் கண்டித்தும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வரும் காலங்களில் நிகழக் கூடாது; காவல் உதவி ஆய்வாளா் இசக்கி ராஜா மீது சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வணிகா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை (ஏப்.11) ஆலங்குளத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.