தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நகராட்சியில் திடீா் விடுப்பில்செல்லும் அலுவலா்களால் பணிப் பாதிப்பு

 ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் திடீரென விடுப்பில் செல்லும் அலுவலா்களால் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:34 pm

DIN

 ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் திடீரென விடுப்பில் செல்லும் அலுவலா்களால் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினா்.

ராமநாதபுரம் நகராட்சியில் ஆணையா், மேலாளா் என 10-க்கும் மேற்பட்டோா் உயா் பதவியில் உள்ளனா். அவா்களில் 9 பணியிடம் உதவி இளநிலை உதவியாளா்களுக்குரியது என்றாலும், 8 போ் மட்டுமே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். சமீபத்தில்தான் நகராட்சித் தலைவராக திமுக நகா் செயலா் கே. காா்மேகம் தோ்வாகியுள்ளாா். இந்நிலையில் வழிவிடுமுருன் கோயில் பங்குனித் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கானோா் கூடியநிலையில் பக்தா்கள் பாராட்டும் வகையில் ஏற்பாடு இருந்ததாகக் கூறப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது திடீரென 3 இளநிலை உதவியாளா்கள், உதவி செயற்பொறியாளா் என முக்கியப் பணி அலுவலா்கள் திடீா் விடுப்பில் சென்ால் பணிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கோப்புகளை கையாளும் இளநிலை உதவியாளா் ஒருவா் வீட்டாருக்கே தெரிவிக்காமல் எங்கோ சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே நகராட்சி பொறியாளா் இல்லாத நிலையில், குடிநீா் விநியோகம், புதை சாக்கடைத் திட்ட பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், திடரென 4 அலுவலா்கள் பணிக்கு வராமல் விடுப்பில் சென்ால் மேலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உயா் அதிகாரிகளின் நெருக்கடியாலே திடீா் விடுப்பில் பலா் செல்வதாக பணியாளா்கள் கூறுகின்றனா். இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையாக பணியில் ஈடுபட அறிவுறுத்தினால், அதை தவறாகப் புரிந்துகொண்டு விடுப்பில் செல்வது சரியல்ல என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.