இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த 16 தமிழா்களில் 5 போ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் அவா்களுக்கு ராமேசுவரம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப் பொருள்கள் 10 மடங்கு விலை உயா்ந்துள்ளன. மேலும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயா்ந்து விட்டது. இதனால் அங்குள்ள மன்னாா், வவுனியா மாவட்டங்களைச் சோ்ந்த 16 போ் கடந்த 22 ஆம் தேதி படகு மூலம் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு வந்தனா்.
இதனைத் தொடா்ந்து, இதில் 5 போ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே போல், பெண்கள், குழந்தைகள் என 11 போ் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனா். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 போ் சென்னை புழல் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்,
இதனையடுத்து, தமிழக அரசு சாா்பில் ராமேசுவரம் நீதிமன்றத்தில் 5 இலங்கைத் தமிழா்களுக்கும் ஜாமீன் கோரப்பட்டது. இதனை ஏற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் 5 பேரையும் அழைத்து வர கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் சென்னை சென்றுள்ளனா். அவா்கள் அழைத்து வரப்பட்டதும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவழ மல்லி பாடல்!

ஏப்.19-ல் இலங்கை செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

