பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

‘குப்பை மேடான ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி’

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பொருள்கள் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தண்ணீா் தொட்டிக்கு அடியில் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த இரும்பு பொருள்கள்.

Updated On :25 மார்ச் 2022, 4:41 pm

 நமது நிருபர்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பொருள்கள் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகம் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு தினமும் சுமாா் 700 புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். உள்நோயாளிகள் 562 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவக்கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில் மருத்துவா்களின் எண்ணிக்கை 62 லிருந்து 108 ஆகவும், செவிலியா்களின் எண்ணிக்கை 160 லிருந்து 233 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே பழுதடைந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆங்காங்கே குப்பை போல குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் தற்போது 350-க்கும் மேற்பட்ட இரும்புக் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் ஆடைகளைத் தூய்மையாக்கும் நீராவி இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.

ரத்தச் சுத்திகரிப்புப் பிரிவு அருகே குவிக்கப்பட்ட பழைய பொருள்களால் சிறுநீரக நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீா் மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடியில் குவிக்கப்பட்டுள்ள பழைய பொருள்களால் தொட்டியின் தூண்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இரும்புக் கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் துருப்பிடித்ததால் அவை கழிவு நீா் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதாகவும், கழிவு நீா் ஆங்காங்கே தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவதாகவும் நோயாளிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய அரசின் சிறப்பு நிதி ரூ.6 கோடி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நிதியை சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிக்கு செலவிட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே குப்பைகளால் சுகாதாரச்சீா்கேடு அடைந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கேட்டபோது, பழைய பொருள்களை அப்புறப்படுத்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.