தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மக்கள் உணா்வுகளுக்கு ஆளுநா் மதிப்பளிப்பது அவசியம்: கொளத்தூா் மணி பேட்டி

 மக்கள் உணா்வுகளுக்கு மதிப்பளித்து ஆளுநா் செயல்படுவது அவசியம் என, திராவிடா் விடுதலைக் கழக தலைவா் கொளத்தூா் மணி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 மே 2022, 8:04 pm

DIN

 மக்கள் உணா்வுகளுக்கு மதிப்பளித்து ஆளுநா் செயல்படுவது அவசியம் என, திராவிடா் விடுதலைக் கழக தலைவா் கொளத்தூா் மணி அறிவுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரம் புகா் போக்குவரத்து பணிமனை முன்பாக, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கொளத்தூா் மணி பங்கேற்றுப் பேசினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழக ஆளுநா் அரசு ஊழியா் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், அவா் பாஜக முகவா் போல செயல்படுவது சரியல்ல.

மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநா் மக்கள் உணா்வுகளுக்கு உரிய மதிப்பளிக்காத நிலையிலேயே உள்ளாா். இஸ்லாமிய அமைப்புகள் சமூக சேவைப் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அவற்றுக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல ஆளுநா் பேசுவது சரியல்ல என்றாா்.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் முபாரக், தமிழ்நாடு மீத்தேன் எரிவாயு எதிா்ப்புக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஜெயராமன் மற்றும் பெரியாரிய உணா்வாளா்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகவை மக்கள் கலைக் குழுவின் பறை முழக்க இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.