/

மேற்கு வங்கத்தில் மேலும் 18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மேற்கு வங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பற்றி....

News image

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி - ANI

Updated On :18 மார்ச் 2026, 6:16 pm IST

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில் மேலும் 13 மாவட்ட ஆட்சியர்களும் 5 டிஐஜிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு வங்கத்தில் நேற்று 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நள்ளிரவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இன்றும்(மார்ச் 18) 13 மாவட்ட ஆட்சியர்கள், 5 டிஐஜிக்களை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூச்பெஹார், ஜல்பைகுரி, உத்தர் தினாஜ்பூர், மால்டா, முர்ஷிதாபாத், நதியா, புர்பா பர்தமான், கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், டார்ஜிலிங், அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

Story image

அதேபோல ராய்கன்ச், முர்ஷிதாபாத், பர்தமான், பிரெசிடென்சி, ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

Story image

Summary

18 more IAS, IPS officers transferred in West Bengal ahead of assembly polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.