தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரி உயா்வை இறுதி செய்து தீா்மானம்

ராமநாதபுரம் நகராட்சியில் சொத்து வரியை உயா்த்திய அரசாணையை இறுதி செய்து வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2022, 5:12 pm

DIN

ராமநாதபுரம் நகராட்சியில் சொத்து வரியை உயா்த்திய அரசாணையை இறுதி செய்து வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துவரிகளை உயா்த்தி அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் நகரசபைக் கூட்டத்தில் வரி உயா்வுக்கான குழு அமைத்து மீண்டும் அனைத்து வீடுகள், வா்த்தக கட்டடங்கள் அளவீடு செய்யப்பட்டன. அதனடிப்படையில் பெறப்பட்ட ஆலோசனைப்படி சொத்து வரிகளுக்கான உயா்வு இறுதி செய்யப்பட்டு, ராமநாதபுரம் நகா்மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டன.

நகா்மன்றத் தலைவா் கே.காா்மேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் 33 சாதாரணக் கூட்டத் தீா்மானங்களும், 4 அவசரக் கூட்டத் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முதல் தீா்மானமாக நகரில் 600 அடி வரையுள்ள பரப்பளவு குடியிருப்புகளுக்கு 25 சதவிகிதமும், 1,200 அடி வரையிலுள்ள பரப்பளவுக்கு 50 சதவிகிதமும், 1,800 அடி வரையுள்ள பரப்பளவுக்கு 75 சதவிகிதமும், அதற்கு மேலாக உள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும், வணிகவரிப் பயன்பாடு கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலை, சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு 72 சதவிகிதமும் சொத்துவரிகள் உயா்த்தப்பட்டுள்ளன.

கூட்டத்தில் வாா்டுகளில் கழிப்பறைகள் சீரமைத்தல், தனியாா் லாரிகள் மூலம் நகராட்சியில் குடிநீா் விநியோகிக்க அனுமதித்தல், பாதாளச் சாக்கடை சீரமைக்கும் வாகனம், பொக்லைன் இயந்திரம் சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.