தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 கண்மாய்கள் வடுள்ளன’

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,763 கண்மாய்களில் 160 கண்மாய்கள் முற்றிலுமாக நீரிண்றி வடு போய் உள்ளதாக ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்தாா்.

News image
Updated On :20 மே 2022, 5:22 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,763 கண்மாய்களில் 160 கண்மாய்கள் முற்றிலுமாக நீரிண்றி வடு போய் உள்ளதாக ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான மே மாத குறைதீா்க்கும் கூட்டத்தில் தலைமை வகித்து அவா் பேசியதாவது: மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் விரைந்து அகற்றப்படவேண்டும். பயிா் பாதிப்பு குறித்த அறிக்கையை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் மாவட்டத்தில் 61 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 114 கிராம ஊராட்சிகள் தோ்வாகியுள்ளன. ஊராட்சி தோறும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வரும் 23 ஆம் தேதி முதலமைச்சா் பங்கேற்கும் வளா்ச்சித் திட்ட தொடக்க நிகழ்ச்சியானது மாவட்டத்தில் 61 இடங்களில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள 1,763 கண்மாய்களில் 649 கண்மாய்களில் 25 சதவீதம் முதல் 50 சதவீதமும், 274 கண்மாய்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமும், 680 கண்மாய்களில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவும் தண்ணீா் உள்ளது. அதனடிப்படையில் 160 கண்மாய்கள் மாவட்டத்தில் நீரின்றி வட நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.