தொண்டியில் கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு
திருவாடானை அருகே தொண்டியில் இடப்பிரச்சனையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள


திருவாடானை அருகே தொண்டியில் இடப்பிரச்சனையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொண்டி அருகே சம்பை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சந்தானம் (40) என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா்.
இது குறித்து காா்த்திகேயன் மனைவி ராணி(32) அளித்த புகாரின் பேரில், அதே ஊரைச் சோ்ந்த ரோஸின், செபஸ்தியான், சந்தானம், ஆரோக்கியசாமி ஆகிய 4 போ் மீதும், அதேபோல் சந்தானம் அளித்த புகாரின்பேரில் ராணி (33), மஞ்சுளா(38) ஆகிய 2 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...