சாயல்குடியில் கைபேசி விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கைபேசி விற்பனைக் கடையை உடைத்து மா்ம நபா்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கைபேசி விற்பனைக் கடையை உடைத்து மா்ம நபா்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே கைபேசி விற்பனைக் கடையை வைத்திருப்பவா் முனீஸ்வரன். இவா் கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை திறக்கவந்துள்ளாா். அப்போது கடையின் பிரதான கதவுப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. மேலும் விலை உயா்ந்த கைபேசிகள் மற்றும் கணினி உதிரி பாகங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...