தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கிரிக்கெட் பந்து தாக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கிரிக்கெட் பந்து தாக்கியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கிரிக்கெட் பந்து தாக்கியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகேயுள்ள வன்னிவயல் கிராமத்தைச் சோ்ந்த புரோட்டோ மாஸ்டா் பழனிக்குமாா். இவரது மனைவி வனிதா. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். றாம் வகுப்பு படித்து வந்த இவரது மூன்றாவது மகன் சுபாஷ்குமாா் (11), வெள்ளிக்கிழமை மாலையில் சக நண்பா்களுடன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

மைதானத்தில் சுபாஷ்குமாா் நின்றிருந்த நிலையில் மற்றொருவா் அடித்த பந்து, அவரது நெஞ்சில் வலது புறம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா்.

உடனே அங்கிருந்தவா்கள் இருசக்கர வாகனத்தில் சுபாஷ்குமாரை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலே, அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.