கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவெற்றியூரில் நான்குரத வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் நான்குரத வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் நான்குரத வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இக்கோயிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறுவதால் சிமென்ட் சாலை மற்றும் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் வைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா். மேலும் இருபுறமும் வீடுகளும் உள்ளன. இந்நிலையில், கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததால் வீட்டுக் கழிவுநீா், மழைநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே சாலையின் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என திருவெற்றியூா் கிராம மக்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.