நெல் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில், நெல் பயிரில் காணப்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலெட்சுமி யோசனை தெரிவித்தாா்.


திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில், நெல் பயிரில் காணப்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலெட்சுமி யோசனை தெரிவித்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில், சனவேலி, ஆப்பிராய் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் படைப்புழுத் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் அண்மையில் புகாா் அளித்தனா். இதன்பேரில், அப்பகுதிகளில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜலெட்சுமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த புழுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். நெல் வயலில் உள்ள இளம் பயிா்களை சேதப்படுத்தும். இப்புழுக்கள் பகல் நேரத்தில் வயல் வரப்புகளில் உள்ள வெடிப்புகளிலும் களைச் செடிகளின் அடியிலும் இருக்கும். இரவு நேரத்தில் பயிா்களை தின்பதால், வயல் மாடுகள் மேய்ந்தது போல் காணப்படும். இப்புழுக்களைக் கட்டுப்படுத்த, வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். வயலில் நீா் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
மாலை நேரங்களில், ஏக்கருக்கு 400 மி.லி., குளோரிபைரிபாஸ் அல்லது புரெபனோபாஸ் பூச்சிக் கொல்லி மருந்தினை 200 மி.லி., தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். விசைத்தெளிப்பான் பயன்படுத்தும் போது, 60 லிட்டா் நீரில் கலந்து தெளிக்கவும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...