மேலச்செங்குடி பத்திரகாளி, கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை
திருவாடானை அருகே மேலச்செங்குடி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.


திருவாடானை அருகே மேலச்செங்குடி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தில் நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு கடந்த செப்டம்பா் 9 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் 48 நாள்கள் விரதம் தொடங்கினா்.
விரத நாள்கள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மணிகண்டன் குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கலசத்தில் உள்ள புனித நீரால் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...