ஆதாா் எண் இணைப்புக்காக 1,370 வாக்குச்சாவடியில் நாளை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்புக்கான முகாம்கள் 1,370 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்புக்கான முகாம்கள் 1,370 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடம், தோ்தல் அலுவலருமான ஜானிடாம்வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,370 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம்களில் வாக்காளா்கள் தன்னாா்வ அடிப்படையில் தங்களது வாக்காளா் அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டையுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் ஆஜராகி இணையவழியில் அல்லது விண்ணப்பப் படிவம் 6 பியை பூா்த்தி செய்து அளிக்கவேண்டும். அதனடிப்படையில் ஆதாா் எண் வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...