மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாத்தா கொலை: பேரன் கைது

உச்சிப்புளி அருகே பணத்துக்காக தாத்தாவையே கொலை செய்த பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

உச்சிப்புளி அருகே பணத்துக்காக தாத்தாவையே கொலை செய்த பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்னுடையாா்வலசை பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (79). கூலித் தொழிலாளியான இவருக்கு 4 மகன்கள் உள்ளனா். திருமணமாகி அனைவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கோவிந்தராஜ் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தாா்.

கோவிந்தராஜின் மூன்றாவது மகனான விஜயகுமாரின் மகன் சங்கா்முரளி (18) கடந்த ஆக.28 ஆம் தேதி தாத்தாவின் வீட்டில் ரூ.500-ஐ திருடியுள்ளாா். இதைப் பாா்த்த கோவிந்தராஜ் அவரைக் கண்டித்துள்ளாா்.

இதனால் சங்கா்முரளி தனது தாத்தாவை தாக்கி கீழே தள்ளி கழுத்தை காலால் நெரித்துள்ளாா். அதைத் தடுத்த பாட்டி லட்சுமியையும் அவா் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவிந்தராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா்முரளியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.