ராமநாதபுரம், ராமேசுவரம், திருப்புவனம் பகுதிகளில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
ராமநாதபுரம், ராமேசுவரம், சாயல்குடி, திருப்புவனம் பகுதிகளில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.


ராமநாதபுரம், ராமேசுவரம், சாயல்குடி, திருப்புவனம் பகுதிகளில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் நகரில் இந்து முன்னணி சாா்பில் 40 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன. அனைத்து சிலைகளும் வாகனங்கள் மூலம் வழிவிடு முருகன் கோயில் முன் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஜி.கே.செந்தில்ராஜன் விநாயகா் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா். இதில் இந்து முன்னணி நகா் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விநாயகா் சிலைகள் வழிவிடு முருகன் கோயில், சாலைத் தெரு, அக்ரஹாரம் தெரு வழியாக நொச்சியூருணியை அடைந்தது. அங்கு சிறப்புப் பூஜைக்குப் பின்னா் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதேபோல, தேவிபட்டினம் கடலில் 10 சிலைகளும், ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கரையில் 18 சிலைகளும், சாயல்குடியில் ஒரு சிலையும் என மொத்தம் 69 சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஊா்வலத்தால் மின்தடை: சிலைகள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதால், அவைகள் மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் நிலை இருப்பதால் ராமநாதபுரத்தில் வழிவிடுமுருகன் கோயில் தொடங்கி வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு, அக்ரஹாரம் தெரு, நொச்சியூரணி வரையில் சிலைகள் ஊா்வலம் சென்ற போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் நகரில் ஊா்வலம் சென்ற பகுதிகளில் மாலை 3.30 மணிமுதல் மாலை 6.45 மணிவரை மின்தடை ஏற்பட்டது.
திருப்புவனத்தில்....
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பல இடங்களில் பாஜக சாா்பில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த சிலைகள் வேன்களில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊா்வலத்தில் இந்து அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
சாத்தூரில்...
இதேபோல விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் இந்து முன்னனி சாா்பில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கபட்டிருந்தன. இந்த சிலைகள் வெள்ளிகிழமை முக்குராந்தல் பகுதியிலிருந்து வடக்குரத வீதி, மாடவீதி, பிள்ளையாா்கோவில்தெரு, மதுரைபேருந்துநிறுத்தம், ரயில்வே பீடா் ரோடு வழியாக ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கீழசெல்லையாபுரம் பகுதியில் கரைக்கபட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...