மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைபெற வாரந்தோறும் சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் அறிவித்துள்ளாா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இதுவரையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்றது .அங்கு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளது சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இனிவருங்காலங்களில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. அந்த முகாம் மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறவுள்ளது.
ஆகவே இதுவரை தேசிய அடையாள அட்டைபெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு அடையாள அட்டையைப் பெற்று பயனடையலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...