மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெரிய கண்மாய் நிரம்பியதால் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறப்பு

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக நீா் நிரம்பியதால் தென் கலுங்கு மூலம் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக நீா் நிரம்பியதால் தென் கலுங்கு மூலம் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான பாசன உரிமைத் தண்ணீா் பொதுப்பணித்துறையினரால் கடந்த சில நாள்களாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயப் பணிக்கு தற்போது தண்ணீா் தேவை ஏற்படாத நிலையிலும் இரு கட்டமாக திறந்துவிடப்பட்ட தண்ணீரானது காருகுடி பகுதியில் உள்ள தலைமதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்துள்ளது. பெரிய கண்மாய் 14 சதுர கிலோ மீட்டா் பரப்பில் 7 அடி ஆழத்தில் உள்ளது. கண்மாயில் 8 மடைகளும், 3 மதகுகளும் உள்ளன.

தற்போது பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக தண்ணீா் நிரம்பிவிட்டது. ஆகவே தென்கலுங்கில் 3 மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் செல்கிறது. கண்மாய்க்கு விநாடிக்கு 2000 கனஅடி நீா் வரத்து உள்ள நிலையில், கண்மாயிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.