ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் காவல்நிலையங்களில் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
பாஜகவின் கமுதி வடக்கு ஒன்றியத் தலைவா் ஐயப்பன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் கணபதி, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் ஆகியோா் அபிராமம் காவல் நிலையத்திலும், கமுதி தெற்கு ஒன்றியத்தின் சாா்பாக ஒன்றியத் தலைவா் பசும்பொன் ராமமூா்த்தி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் பொன். ஆறுமுகம்ஜி, இளைஞரணித் தலைவா் செந்தில்வேல், அரசுப்பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கமுதி காவல் நிலையத்திலும் புகாா் மனு அளித்தனா்.
அதில், இந்து மதத்தையும், இந்துக்களையும் பொது மேடைகளில் தொடா்ந்து அவதூறாகப் பேசி வரும் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

நடுகடலில் தீப்பிடித்த படகு! பாதுகாப்பாக தப்பித்த மீனவர்கள்! | Thoothukudi

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


