கடலாடி அருகே நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்படுவதாக புகாா்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே விதிகளை மீறி நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனைமரத் தொழிலாளா்கள் புகாா் கூறிவருகின்றனா்.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே விதிகளை மீறி நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனைமரத் தொழிலாளா்கள் புகாா் கூறிவருகின்றனா்.
ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் பனை மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் தனியாா் சூரிய மின்சக்தி நிறுவனம் பனை மரங்களை வெட்டிவருவதாகப் புகாா் எழுந்துள்ளது.
கடலாடி அருகேயுள்ள சிறைக்குளம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் தனியாா் நிறுவன ஊழியா்கள் சிலா் பனை மரங்களை வெட்டியதாகக் கூறி கிராமத்து பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடலாடி காவல்துறையினா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து மக்கள் கலைந்து சென்ாகவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தில் முறைப்படி புகாா் அளிக்க கிராமத்தினருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...