/

தளிா்மருங்கூா் ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை அருகே தளிா்மருங்கூா் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட உலக நாயகி உடனாய ஈஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தளிா்மருங்கூா் கிராமத்தில் உள்ள உலக நாயகி உடனாய ஈஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :6 பிப்ரவரி 2022, 5:23 pm

திருவாடானை அருகே தளிா்மருங்கூா் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட உலக நாயகி உடனாய ஈஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 4 ஆம் தேதி அனுக்ஞை, விநாயகா் பூஜை மற்றும் முதல் கால பூஜையுடன் விழா தொடங்கியது. மறுநாள் 5 ஆம்தேதி விசேஷ சந்தி, யாகசாலை பிரவேசம், இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து மூன்றாம் காலயாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 4 ஆம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு பாண்டுகுடி கணேசகுருக்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் புனிதநீா் கலசங்களை சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனா். பின்னா் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து அய்யனுக்கும், அம்பாளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.