ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

நடிகர் விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்: விக்னேஷ் சிவன்

விஜய் குறித்து விக்னேஷ் சிவன்...

vijay and vignesh shivan

விஜய், விக்னேஷ் சிவன்

Updated On :

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, நானும் ரௌடிதான் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

அடுத்தடுத்து சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால், இவை இரண்டும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.

தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் படக்குழு நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவனிடம், “போடா போடி திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் என்ன?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு விக்னேஷ் சிவன், “போடா போடி திரைப்படத்தின் இயக்குநராக நான் ஒப்பந்தமானபோது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும்போது 27 ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்துடன் போடா போடி வெளியானது. அங்கேயே படம் முடிந்துவிட்டது. அந்த மாபெரும் பிளாக்பஸ்டர் முன் போடா போடியால் நிற்க முடியவில்லை.

துப்பாக்கி திரைப்படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக்கொல்வார். ஆனால், உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. அன்று அவர் சுட்ட 13-வது ஆள் நான்தான்” என்றார்.

Summary

Director Vignesh Shivan has spoken about poda podi movie and actor, Tvk leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.