திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!

எல்ஐகே படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியிருப்பதாவது...

News image

இயக்குநர் விக்னேஷ் சிவன். - படம்: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:55 pm IST

எல்ஐகே படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தவெக தலைவர் விஜய் பாணியில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது.

எல்ஐகே திரைப்படம் முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

எல்ஐகே முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “பிரதீப் ப்ரோ, இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலிக்கும். கான்ஃபிடன்டா இருங்க, வெற்றி நிச்சயம்” எனக் கூறியுள்ளார்.

நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தின் போது எல்லா மேடைகளிலும் இந்த வசனத்தைக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் வெளியாகாமல் இருக்கும் நிலையில், சமீபத்தில் இந்தப் படம் இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Summary

"This movie is also guaranteed to hit ₹100 crores!" Vignesh Shivan extends his wishes in true Vijay style!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.