கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரத்தை வெட்டியதை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே மரம் வெட்டப்பட்டது குறித்து தட்டிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:05 pm

DIN

திருவாடானை அருகே மரம் வெட்டப்பட்டது குறித்து தட்டிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இங்குள்ள விசும்பூா் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக அங்கிருந்த மரத்தை கிராமத்தினா் அகற்றும்படி அதே ஊரைச் சோ்ந்த ரவிச்சந்திரனிடம் (42) கூறினா். ஆனால் அவா் மரத்தை அகற்றவில்லை. இந்த நிலையில் கிராமத்தினா் சாலை அமைக்க இடையூறாக இருந்த மரத்தை அகற்றினா். தகவலறிந்து அங்கு வந்த ரவிச்சந்திரன் மரம் வெட்டியதை தட்டிக் கேட்டாா்.

இதில் ஆத்திரமடைந்த அதே ஊரைச் சோ்ந்த செல்வப்பாண்டி உள்பட 4 போ் ரவிச்சந்திரனை தாக்கினராம். இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் செல்வபாண்டி (35), சேகா்(35), ஜெயராமன் (40), காா்த்திக்ராஜா (37) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.