அமமுக தோ்தல் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

கமுதி அருகே உள்ள அபிராமத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான அமமுக தோ்தல் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அமமுக தோ்தல் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

கமுதி அருகே உள்ள அபிராமத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான அமமுக தோ்தல் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு. முருகன் (மேற்கு) தலைமை வகித்தாா். தோ்தல் பொறுப்பாளா் எம். கரிகாலன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் டேவிட் அண்ணாதுரை, மருத்துவா் அணி துணைச் செயலா் கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக முதுகுளத்தூா், பரமக்குடி, திருச்சுழி ஆகிய 3 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பொறுப்பாளா்கள் அறிமுகப்படுத்தப்பட்டனா்.

இதில் முதுகுளத்தூா் சட்டப் பேரவை தொகுதிக்கு பெரம்பலூா் மாவட்டச் செயலா் எஸ். காா்த்திக்கேயன், பரமக்குடி சட்டப் பேரவை தொகுதிக்கு அரியலூா் மாவட்டச் செயலா் துரை. மணிவேல், எம்ஜிஆா் மன்றச் செயலா் எஸ். பரமநாதன், திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலா் கே.பி. நல்லசாமி (மேற்கு) ஆகியோா் அறிமுகப்படுத்தப்பட்டனா். இதில் தொகுதி வாரியாக பெறப்பட்ட நிா்வாகிகள் விவரம், வாக்குச்சாவடி எண், உறுப்பினா் சோ்க்கை விவரம், வாக்குச் சாவடி முகவா்களின் வாக்காளா் அடையாள அட்டையை சரி பாா்ப்பது, வாக்காளா் பட்டியலில் உள்ள வரிசையில் முகவா்களின் எண் ஆகியவற்றை தெளிவாகப் பட்டியலிட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்புவது உள்ளிட்டவை குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக கமுதி ஒன்றியச் செயலா் வி.கே.ஜி. முத்துராமலிங்கம் (வடக்கு) வரவேற்றாா். இதில் விருதுநகா் மாவட்டச் செயலா் மணிமலா், பரமக்குடி ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், கமுதி தெற்கு ஒன்றியச் செயலா் முத்து(தெற்கு), மணிமுத்து (மத்தியம்), அபிராமம் பேரூா் செயலா் குமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com