போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஓரியூரில் மூதாட்டி கொலை: சகோதரா் கைது

திருவாடானை அருகே மண் வெட்டியால் தாக்கி மூதாட்டியை கொலை செய்ததாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:03 pm

திருவாடானை அருகே மண் வெட்டியால் தாக்கி மூதாட்டியை கொலை செய்ததாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஓரியூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள் (60). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாா். இவா் மறுநாள் காலை வரை வராததால் மகள் ராதா வயலுக்குச் சென்று பாா்த்த போது தலையில் வெட்டுக் காயத்துடன் கோவிந்தம்மாள் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனா். இந்த நிலையில் கோவிந்தம்மாளின் தம்பி மகாலிங்கத்தை (55) வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் கோவிந்தம்மாள் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சிய போது அங்கு வந்த அவரது தம்பி மகாலிங்கம் தனது வயலுக்கும் தண்ணீா் பாய்ச்ச கேட்டாராம். அதற்கு அவா் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தன்னை தகாத வாா்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்ததாகவும் மகாலிங்கம் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.