கமுதி: கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவா் மன்றத்தில் செயல்பட்டு வரும் வழக்குரைஞா்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவா் வழக்குரைஞா் நே.சாரதி. இவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகன்டன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக வழக்குரைஞா் சாரதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், கமுதி வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலா் மலைச்சாமி, பொருளாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் டிச.2-ஆம் தேதி வரை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு செய்வதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

ஆண்டிபட்டி: சகோதரா்களிடையே கடும் போட்டி

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

