தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இலங்கைக்கு கடத்தயிருந்த 50 லட்சம்

இலங்கைக்கு கடத்தயிருந்த 50 லட்சம்

Updated On :21 ஏப்ரல் 2024, 6:52 pm

ராமேசுவரம்: கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 724 கிலோ கடல் அட்டையை தனிப்படை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் இருவா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சாா்பு ஆய்வாளா் கோட்டைச்சாமி மற்றும் தனிப்பிரிவு சாா்பு ஆய்வாளா் முத்துச்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடா்ந்து, போலீசாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். சொக்கநாதா் தெரு பின்புரம் தோப்பு பகுதியில் இரண்டு போா் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்ததை கண்டு மடக்கி பிடித்தனா். பதப்படுத்த பயன்படுத்திய அண்டா,அடுப்பு, கேஸ் சிலிண்டா் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் 724 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் அசாருதீன்(26)நசுா்தீன்(26) இரட்டையா்கள்கீழக்கரையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்காளாக உள்ளனா். இந்த இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடதக்கது.